ஒரே நாளில் 155 பேருக்கு டெங்கு பாதிப்பு... கர்நாடகாவில் வேகமெடுக்கும் டெங்கு!

 
உஷார்!! இந்த 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு !!

ஒரே நாளில் கர்நாடகா மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அத்துடன் டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகளுக்கும் அச்சமூட்டி வருகின்றன. சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் டெங்குவால் முதல் பலி ஏற்பட்டுள்ளது. பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குடிபந்தே நகரைச் சேர்ந்த வேணு(50) என்பவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக அவரது உறவிர்கள் தெரிவித்துள்ளனர்.

டெங்கு

இந்நிலையில். கர்நாடகா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 155 பேருக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூரு பிபிஎம்பியின் கீழ் மொத்தம் 107 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும் மாநிலத்தில் மொத்தம் 343 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் டெங்கு காய்ச்சலால் மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரப்பூர்வமாக தகவல் அளித்துள்ளது.

மக்களே  உஷார்! இந்த மாவட்டங்களில் அதிகரிக்கும் டெங்கு!

கடந்த 24 மணி நேரத்தில் 899 பேருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அதில் 155 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் 107 பேருக்கும், சித்ரதுர்காவில் 10 பேருக்கும், தாவங்கரேயில் 4 பேருக்கும், ஷிமோகாவில் 9 பேருக்கும், உத்தர கன்னடாவில் 2 பேருக்கும், விஜயநகரில் 4 பேருக்கும், ஹாசனில் 16 பேருக்கும், உடுப்பியில் 3 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், 142 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

From around the web