கோர விபத்து... லாரி மீது வேன் மோதி 11 பேர் பலி; 15 பேர் படுகாயம்!

பஞ்சாப் மாநிலத்தில் லாரி மீது வேன் மோதி கோர விபத்திற்குள்ளாகியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் பிக்-அப் வேன் ஒன்றில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து ஜலாலாபாத்தில் நடைபெறும் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். குருஹர்சஹாய் சப்-டிவிஷன் அருகே உள்ள ஒரு கிராமத்தின் அருகே வேன் சென்றுக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பிக்-அப் வேனும் லாரியும் நேருக்கு நேராக மோதியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
பிக்-அப் வேனில் முக்கியமாக பணியாளர்களாக பணிபுரிபவர்களை ஏற்றிக்கொண்டு, ஜலாலாபாத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்ளச் சென்றுள்ளனர். காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த உடனேயே, "சதக் சுரக்ஷா ஃபோர்ஸ்" (SSF) குழுக்கள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணியைத் தொடங்கியதாக ஃபெரோஸ்பூரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் சௌமியா மிஸ்ரா தெரிவித்தார்.
நேற்று காலை 8 மணியளவில் நடந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
பலத்த காயமடைந்தவர்களில் சிலர் ஃபரித்கோட்டில் உள்ள குரு கோவிந்த் சிங் மருத்துவக் கல்லூரிக்கும், மேலும் சிலர் ஜலாலாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் துணை ஆணையர் தீப்ஷிகா சர்மா தெரிவித்தார்.
விபத்து நடந்த உடனேயே 5 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டன என்று காவல் துறை கமிஷ்னர் கூறினார். அதே நேரத்தில் காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை நிர்வாகம் ஏற்கும் என்று கூறினார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளனர்.
“பெரோஸ்பூரில், கேன்டரும், பிக்-அப் வாகனமும் மோதியதில் பெரும் விபத்து நடந்ததாகச் செய்தி வந்தது, அதில் திருமண விழாவுக்குச் சென்ற பணியாளர்கள் பரிதாபமாக இறந்த செய்தி கிடைத்தது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பஞ்சாப் அரசு துணை நிற்கிறது" என்று பஞ்சாப் முதல்வர் மான் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஷிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், தனது ட்விட்டர் பதிவில், "ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் குருஹர்சஹாய் அருகே ஒரு பயங்கரமான சாலை விபத்து பற்றி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இதயப்பூர்வமான இரங்கல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள். இந்த துயரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் இந்த கடினமான காலகட்டத்தில் வலிமை பெறட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!