அதிர்ச்சி... போலீசாரின் கன்னத்தில் அறைந்த ஆட்டோ ஓட்டுநர்... வைரலாகும் வீடியோ!

 
போலீஸ் தாக்குதல் போலீஸ் தாக்குதல்

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தானேவில் ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுனர், போக்குவரத்து காவலர் இருவருக்கும் இடையே  கைகலப்பு  உருவாகி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோ பதிவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் போக்குவரத்து காவலரை கன்னத்தில் அறைகிறார். அதனைத்தொடர்ந்து போக்குவரத்து காவலரும் ஓட்டுனரை கன்னத்தில் பளார் விடும் சம்பவமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Loading tweet...


அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரவிசாரணை செய்து வருகின்றனர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போலீசார் கலவரம் காவல்துறை மறியல் போராட்டம்

பணியில் இருக்கும் போது சட்ட அமலாக்கப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.   

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா