லாரியுடன் பேருந்து மோதி கோர விபத்து... 8 பேர் பலி; 40 பேர் படுகாயம்!
லாரியுடன் அரசு பேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 40 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் பலமனேரு நகரில் இருந்து சித்தூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துக் கொண்டிருந்த நிலையில், மொலிகி கட் பகுதியில் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

அந்த சமயத்தில் திடீரென எதிரில் வந்த லாரி மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 8 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அத்துடன் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
