கார் மோதி விபத்து... கர்ப்பிணி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

பூரானி பகுதியில் வசித்து வந்த ரவீந்திர சாஹ்னியின் மனைவி 25 வயதான ஜோதி எனும் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவரது குடும்பத்தினர் 42 வயதான ஊர்மிளா, லோஹா சாஹ்னியின் மனைவி; 36 வயதான விபா, பிரமோத் சாஹ்னியின் மனைவி; தினேஷ் சாஹ்னியின் மனைவி காந்தி தேவி; மற்றும் சுபோத் சாஹ்னியின் மனைவி லலிதா அவளை மாவட்ட மருத்துவமனைக்கு எலக்ட்ரிக் ரிக்ஷாவின் அழைத்துச் சென்றனர்.
நைனிடால் சாலையில் பெட்ரோல் பங்க் அருகே வேகமாக வந்த கார் இவர்கள் சென்றுக் கொண்டிருந்த ரிக்ஷா மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பூரானியைச் சேர்ந்த ரிக்ஷா ஓட்டுநர் மனோஜ், கர்ப்பிணி ஜோதி, ஊர்மிளா, விபா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காந்திதேவியும், லலிதாவும் பலத்த காயமடைந்தனர்.

விபத்தை கண்டதும் அந்த பகுதியில் இருந்த ஏராளமானோர் திரண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
