குளிர்கால சொறிக்கான காரணங்கள், சிகிச்சைகள்!!
கோடைகாலத்தை விட குளிர் மற்றும் மழைக்காலம் மிகக் கடுமையானது. இந்த காலகட்டத்தில் நமது சருமம் வெப்பநிலை மற்றும் காற்று தோலில் ஈரப்பதத்தை குறைத்து உலர வைக்கும்.
இதனால் சிலருக்கு குளிர்கால சொறி உருவாகலாம். இதனால் சருமம் வறண்டு போகும்.
இதற்கான காரணங்கள்
நமது சருமத்தில் இயற்கையாகவே எண்ணெய் பசை உள்ளது. அது ஈரப்பதத்தை தோலில் தக்கவைக்கும். குளிர்காலத்தில், குளிர்ந்த வெப்பநிலை தோலின் ஈரப்பதத்தை ஆவியாக்கி, சரும செல்கள் வறண்டு, அரிப்பு ஏற்பட்டு தோலில் வெடிப்பு உருவாகிவிடலாம்.
மன அழுத்தம், ஒவ்வாமை, மருந்துகளின் எதிர்வினை, சன் பர்ன்ஸ், வெந்நீரில் மட்டும் குளித்தல், அறை ஹீட்டர்களின் அதிகப்படியான பயன்பாடு இவைகளாலும் உருவாகலாம் .
வராமல் தடுக்க முன்னேற்பாடுகள்:
இதற்கு சிறந்த சிகிச்சை சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மட்டுமே.
லாக்டிக் சேர்த்த தோல் க்ரீம்களை உபயோகிக்கலாம்.
குளித்தவுடன் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துதல்
தேங்காய் எண்ணெய் பயன்படுத்தல்
நுரை அல்லாத சோப்புக்கள் , குளியல் பொருட்களைத் தேர்வு செய்தல்
நீண்ட நேரம் ஹீட்டர்கள் பயன்பாட்டை தவிர்த்தல்
போதுமான அளவு தண்ணீர் குடித்தல்
குளிர்கால கையுறைகள் அல்லது ஆடைகளை அணிதல்
இவைகளை தொடர்ந்து கடைப்பிடித்து தடிப்புகள் அதிகமாகி விட்டால் உடனடியாக தகுந்த மருத்துவரை அணுகலாம்.
