சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு..!!

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு..!!

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 30ம் தேதி துவங்கி டிசம்பர் 9ம் தேதி வரை நடைபெறு எனவும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு டிசம்பர்- 1ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சூழல் காரணமாக சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு இரு பருவங்களாக நடத்தப்படும் என அறிவித்தது.

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு..!!

அதன்படி முதல் பருவத் தேர்வு நவம்பர் முதல் டிசம்பர் வரையும்ம், இரண்டாம் பருவத் தேர்வு மார்ச் முதல் ஏப்ரல் வரையும் நடத்தப்படும் என அறிவிப்பில் சி.பி.எஸ்.இ குறிப்பிட்டது.

மொத்தம் 90 நிமிடங்கள் நடைபெறும் தேர்வில், ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத் திட்டத்தின் 50 சதவீத பகுதியில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கபடும். தேர்வை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், முன்னதாக நடைபெற்ற தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு..!!

தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், மழையின் காரணமாக மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தால், தேர்வுகள் நடத்துவது குறித்து அந்தந்த பள்ளிகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.

From around the web