மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசம்... தொண்டர்கள் அதிர்ச்சி!

 
சீதாராம் யெச்சூரி சீதாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக வெளியான தகவல் தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தற்போது 72 வயதாகும் சீதாராம் யெச்சூரி, கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி சுவாசப் பிரச்சனைகள் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், உடண்டியாக சீதாராம் யெச்சூரி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

சீதாராம் யெச்சூரி

மருத்துவக்குழு அவரை பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்த  நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதால் தற்போது சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எய்ம்ஸ்
அவரது உடல்நிலை குறித்து மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சமீபத்தில் தான்  அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா