ஒமிக்ரான் எதிரொலி: தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு செல்ல நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்

 
ஒமிக்ரான் எதிரொலி: தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு செல்ல நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்

ஒமிக்ரான் வைரஸின் பரவல் உலகை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவுக்கு செல்பவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என அம்மாநில அரசு சார்பில் உத்தரவிடபட்டுள்ளது.

ஒமிக்ரான் எதிரொலி: தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு செல்ல நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்

இந்தியாவில் கொரோனா தாக்கம் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகத்திலும் தடுப்பூசி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. மருத்துவ வல்லுநர்களும் உலக சுகாதார அமைப்பும் இந்த புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் குறித்து கடுமையாக எச்சரித்து வருகின்றனர்.

ஒமிக்ரான் எதிரொலி: தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு செல்ல நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்

இதனையடுத்து தமிழகத்திலும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சுகாதாரத்துறை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழக – கர்நாடகா தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, பண்ணாரி, ஆசனூர், காரப்பள்ளம் ஆகிய 3 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படு வருகின்றன. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரில் அமைந்துள்ள புளிஞ்யூர் சோதனைச் சாவடியை அம்மாவட்ட கலெக்டர் நேற்று பார்வையிட்டார். அதன்பிறகு ஒமிக்ரான வரைஸ் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்திலிருந்து வருபவர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடாகா மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

From around the web