6 முதல் 12 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை!

 
6 முதல் 12 வயதினருக்கான கொரோனா  தடுப்பூசி!  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை!

இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியான கோவேக்சின், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடப்பட்டு வருகிறது.

ஆனால் 3 வது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2 முதல் 18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து தீவிரமாக ஆய்வுகளும், மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

6 முதல் 12 வயதினருக்கான கொரோனா  தடுப்பூசி!  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை!

மூன்று கட்டமாக நடைபெறும் அந்த பரிசோதனையில் 12-18, 6-12, 2-6 வயது பிரிவுகளில் முதலில் 175 தன்னார்வலர்களுக்கு மருந்து செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த மருந்துகள் 2ம் கட்ட பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளதாக இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் மே 12ம் தேதி தெரிவித்திருந்தார்.

அதன்படி, 12 முதல் 18 வயதிலான குழந்தை தன்னார்வலர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் முதல் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அடுத்த படியாக 6-12 வயது பிரிவில் பரிசோதனை மேற்கொள்ள தற்போது தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணி டெல்லி எய்ம்சில் இன்று தொடங்கப் படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

From around the web