இந்தியாவில் கடந்த 63 நாட்களுக்குப் பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் குறைந்தது!

 
இந்தியாவில் கடந்த 63 நாட்களுக்குப் பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் குறைந்தது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அசுர வேகம் எடுத்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், கர்நாடக, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக காணப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 63 நாட்களுக்குப் பின்னர் இன்றுதான் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் 86,498 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன, இது 66 நாட்களில் மிகக் குறைவு. செயலில் உள்ள கேசலோட் 97,907 குறைந்து, தற்போது 13,03,702 ஆக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 63 நாட்களுக்குப் பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் குறைந்தது!

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,89,96,473 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86,498 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,123 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 3,51,309 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,73,41,462 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,82,282 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 13,03,702 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் நேற்று வரை 23,61,98,726 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

From around the web