சிறுவன் மீது கொடூர தாக்குதல்.. ரயில்வே போலீசார் வெறிச்செயல்.. ஷாக் வீடியோ!

 
ரயில்வே போலீசார்

மத்திய பிரதேசத்தில் சிறுவன் மற்றும் அவனது பாட்டியை ரயில்வே போலீசார் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருட்டு வழக்கில் 15 வயது சிறுவன் மற்றும் அவனது பாட்டியை ரயில்வே போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.


சிறுவனுக்கு 15 வயது ஆகும் நிலையில், ​முதலில் ​​​அவனுடைய பாட்டி முதலில் அடிக்கப்பட்டார். அப்போது அந்த சிறுவனையும் அடித்து உதைத்தனர். இதுகுறித்து அந்த சிறுவன் கூறுகையில், எனது தந்தை எங்கே என்று கேட்டு என்னையும், பாட்டியையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து சித்ரவதை செய்ததாக கூறினார். எனது தந்தை கூலித்தொழிலாளி என்றும் கூறினார்.

மூதாட்டியை பெல்ட்டால் அடிப்பதும், தலைமுடியை இழுத்து அடிப்பதும் வீடியோவில் உள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ வெளியானதும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கட்னி எஸ்பி தெரிவித்துள்ளார். மேலும் இது பழைய வீடியோ என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ குறித்து பேசிய முன்னாள் முதல்வர், தலித்துகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web