நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம்.. டீன்களுக்கு பறந்த அவசர உத்தரவு!
இன்று காலை 6 மணி முதல் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டீன்களுக்கு நேற்று அவசர உத்தரவு பறந்துள்ளது. இன்று காலை 6 மணி முதல் நாளை ஆகஸ்ட் 18ம் தேதி காலை 6 மணி வரை நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் அனைத்து விதமான அத்தியாவசிய சேவைகளும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர கேஸ்களை மருத்துவர்கள் நேர சுழற்சி அடிப்படையில் கவனித்து கொள்வர். வழக்கமான வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் செயல்படாது மற்றும் அவரசம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் அனைவரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனையொட்டி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என இந்திய மருத்துவத்துறை இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

அவசர கால சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை எவ்விதமான பாதிப்புகள் ஏற்படாமலும், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளை கூடுதலாக மருத்துவர்கள் பணியாற்றவும் அறிவுறுத்தல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து மாவட்ட மருத்துவ இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் கண்காணிக்கவும், நோயாளிகள் பாதிக்கப்படாதவாறு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் எனவும் தனியார் மற்றும் அனைத்து அரசு பொது மருத்துவமனையின் முதல்வர்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
