அதிகாலையில் கொடூரம்... துறைமுகத்தில் 60க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து நாசம்... கதறும் மீனவர்கள்!

அதிகாலையில் பெரும் சோகமாய், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, 60க்கும் மேற்பட்ட படகுகள் முழுவதுமாக எரிந்து நாசமானது. மீனவர்கள் கதறியடித்தப்படி செய்வதறியாது திகைத்தனர்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து சென்று தீயை அணைக்க போராடி வருகின்றனர். அதற்குள்ளாக 60க்கும் மேற்பட்ட படகுகள் முழுவதுமாக எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து நிகழ்ந்த போது, படகில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்றும் தீயணைப்பு வீரர்கள் சோதனை செய்து வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து படகுகளும் எரிந்து நாசமானதால் மீனவர்கள் தீ விபத்து ஏற்பட்டதும் கடற்கரையில் குவிந்து கதறியழுதனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. காவலர்கள் குவிக்கப்பட்டு, அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், ஒரு படகில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த மற்ற படகுகளுக்கும் பரவியிருந்தது தெரிய வந்துள்ளது. மர்ம நபர்கள் யாராவது படகுகளுக்கு தீ வைத்தார்களா அல்லது தொழில் போட்டியில் படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கள் வாழ்வாதாரத்தை கொடுத்த படகுகள் எரிந்து போனதால் மீனவர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். ஆந்திர அரசு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மீனவர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 60க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து நாசமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!