கோர விபத்து: பேருந்து மீது கார் மோதி 5 கல்லூரி மாணவர்கள் பலி... ஒருவர் கவலைக்கிடம்!
கேரள அரசு பேருந்தின் மீது 10 மருத்துவ கல்லூரி மாணவர்கள் சென்றுக் கொண்டிருந்த டவேரா கார் பயங்கர வேகத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
கேரளாவின் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., படித்து வந்த 5 கல்லூரி மாணவர்கள், நேற்றிரவு காரில் சென்றுக் கொண்டிருந்த நிலையில், கேரள அரசுக்குச் சொந்தமான கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (கே.எஸ்.ஆர்.டி.சி.) பயணிகள் பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலியானவர்கள் கோட்டயத்தைச் சேர்ந்த ஆயுஷ் ஷாஜி (19), பாலக்காட்டைச் சேர்ந்த ஸ்ரீதீப் வத்சன் (19), மலப்புரத்தைச் சேர்ந்த பி. தேவானந்தன் (19), கண்ணூரைச் சேர்ந்த முகமது அப்துல் ஜப்பார் (19), லட்சத்தீவைச் சேர்ந்த முகமது இப்ராகிம் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 9 மணியளவில் குருவாயூரில் இருந்து காயம்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தின் மீது அதிவேகமாகச் சென்றுக் கொண்டிருந்த டவேரா கார் மோதி இந்த கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் அப்பளமாய் நொறுங்கி, காரிலிருந்து மருத்துவ மாணவர்கள் வெளியே வீசப்பட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர் கூறினார்.
இந்த விபத்தில் 3 மருத்துவ மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
மேலும் இரண்டு மருத்துவ மாணவர்கள் தற்போது ஆலப்புழா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 10 கல்லூரி மாணவர்கள் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஆலப்புழா நகராட்சி துணைத் தலைவர் பி.எஸ்.எம்.உசேன், அப்பகுதியினர் கூறுகையில், கார் ஒரு வாகனத்தை முந்திச் சென்றதாகவும், அப்போது திடீரென பிரேக் போட்ட போது மழைநீர் தேங்கியிருந்த சாலையில் சறுக்கி எதிர்திசையில் வந்த பேருந்தின் மீது மோதியதாகவும் கூறினார். மருத்துவ மாணவர்கள் கொச்சிக்கு சென்றுக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சிசிடிவி வைக்கப்பட்ட இடத்தில் விபத்து நடந்ததால், சிசிடிவி காட்சிகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என்று போலீசார் கூறினர். கார் அதிவேகத்தில் சென்றதாகவும், நேருக்கு நேர் மோதாமல் இருக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை என்றும் பேருந்து ஓட்டுநர் விபத்து குறித்து தெரிவித்தார்.
இந்த விபத்தை தொடர்ந்து அந்த சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
