இன்று முதல் நாடு முழுவதும் அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை!

 
தேசியக் கொடி தேசியக் கொடி


சுதந்திர தின விழாவை முன்னிட்டு அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை நடைபெறுகிறது.  ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை துவங்கியது. அஞ்சலகங்களில் ஒரு தேசிய கொடி ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தேசியக் கொடி

"இல்லம்தோறும் மூவர்ணக் கொடி” என்ற திட்டத்தின் அடிப்படையில் அனைத்து இல்லங்களிலும் ஆகஸ்டு 9ம் தேதி முதல் 15ம் தேதிவரை மூவர்ணக்கொடி ஏற்ற வேண்டும் என்ற பாரத பிரதமரின் வேண்டுகோளின்படி பொது மக்களின் வசதிக்காக அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கியுள்ளது.
ஆன்லைன் மூலமாக கொடிகள் வாங்க விரும்பும் பொதுமக்கள் https://www.epostoffice.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து வீட்டில் இருந்தபடியே தபால்காரர் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்