பாராசிட்டமால் முதல் ரேபிஸ் தடுப்பூசி வரை ... இன்று முதல் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு... அதிர்ச்சியில் பொதுமக்கள்!

 
மருந்து, மாத்திரைகள்

இன்று ஏப்ரல் 1ம் தேதி முதல் சுமார் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்து ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

பாராசிட்டமால், மார்பின், அட்ரினலின், சிட்ரிசின், பாம்பு விஷத்திற்கு எதிரான ஆன்டிசீரம், சல்புடமைன், சாலிசிலிக் அமிலம், ரேபிஸ் தடுப்பூசி, பிசிஜி, டிபிடி, ஹெபடைடிஸ் பி, ஜப்பான் காய்ச்சல், டெட்டனஸ் தடுப்பூசிகள், ஸ்டீராய்டுகள் உட்பட 800 மருந்துகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்த மருந்துகள் காய்ச்சல், ரத்த சோகை மற்றும் கொரோனா உட்பட பலவகையான  நோய்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

மருந்து, மாத்திரைகள்

மருந்துகளின் விலை 10 முதல் 12 சதவீத விலை உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், மருந்துகளின் விலையை உயர்த்த, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் முடிவு செய்துள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த ஆண்டுகளை காட்டிலும் இம்முறை விலை உயர்வு சதவீதம் சற்று குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய வட்டாரங்கள் இது குறித்து கூறுகையில் “பொதுவாக மக்கள் பயன்படுத்தும் வலி நிவாரணி, நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தொற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் என 800 அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தலாம் என மத்திய அரசு முடிவு செய்திருந்தது. த்த விற்பனை விலைக் குறியீட்டின் வருடாந்திர மாற்றத்திற்கு ஏற்ப, அத்தியாவசிய மருந்துகளின் தேசியப் பட்டியலின் கீழ், அத்தியாவசிய மருந்துகளின் விலையை 0.0055% அதிகரிக்கலாம் என  ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது’ என தெரிவித்துள்ளன.

மருந்து மாத்திரைகள்

தேர்தல் பத்திரங்கள் குறித்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சை உருவான நிலையில்  மருந்து நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையை வாரி வழங்கியுள்ளன. அவற்றில் ரூ.52 கோடிக்கு பத்திரம் வாங்கிய அரபிந்தோ பார்மா நிறுவனம், மொத்த தேர்தல் பத்திரத்தில் பாதிக்கும் மேல் பிஜேபிக்கு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து  ஹெட்டோரோ டிரக்ஸ் லிமிடெட், எம்எஸ்என் பார்மா கம் பிரைவேட் லிமிடெட் மற்றும் நாட்கோ பார்மா லிமிடெட் போன்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தேர்தல் பத்திரங்களுக்கு நிதியை வழங்கியுள்ளன.  ஒவ்வொரு ஆண்டும் அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் குறிப்பிட்ட சில மருந்து நிறுவனங்கள் தங்களது ஆண்டு வருவாயில் 12 முதல் 13 சதவீதம் வரை ஈட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web