பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்... உத்தரபிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு!

 
முக்தார்

பிரபல தாதா முக்தார் அன்சாரி சிறையில் இருந்த நிலையில், நேற்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 63. வன்முறை சம்பவங்களைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக முக்தார் அன்சாரியின் மறைவையடுத்து இன்று உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் செல்வாக்க்கு மிக்க தாதாவாக வலம் வந்தவர் முக்தார் அன்சாரி. இந்நிலையில், முக்தார் அன்சாரியின் மறைவையடுத்து உத்தரபிரதேசத்தில்,  பண்டா, காஜிபூர், பாலியா, பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக சிறையிலிருந்த அன்சாரியை சிறைக் காவலர்கள் பண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முக்தார் அன்சாரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முக்தார்

அன்சாரியின் மரணத்தை உறுதி செய்த மாவட்ட மருத்துவமனை, முக்தார் அன்சாரியின் மரணம் தொடர்பான அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “தண்டனை விதிக்கப்பட்ட / விசாரணைக் கைதியான முக்தார் அன்சாரி, வாந்தி மற்றும் சுயநினைவின்மையுடன் சிறை அதிகாரிகளால் நேற்று இரவு 8.25 மணிக்கு ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரியின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முக்தார் அன்சாரிக்கு 9 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அவசர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், மருத்துவர்களின் முயற்சிகள் எடுபடவில்லை. முக்தார் அன்சாரி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web