குட் நியூஸ்! இந்தியாவில் கொரோனா 3வது அலை பாதிப்பு பெரிதாக இருக்காது! ஐ.சி.எம்.ஆர். தகவல்!

 
குட் நியூஸ்! இந்தியாவில் கொரோனா 3வது அலை பாதிப்பு பெரிதாக இருக்காது! ஐ.சி.எம்.ஆர். தகவல்!

இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. ஆனால் 2வது அலையின் தொடர்ச்சியாக தற்போது , பல்வேறு பூஞ்சை நோய் பாதிப்புகளும் ஏற்பட தொடங்கியுள்ளன. முதல் அலையை காட்டிலும் இந்தியாவில் 2வது அலையில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகம்.

அடுத்ததாக 3 வது அலை உருவாகலாம் என எய்ம்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தற்போது பல மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவி வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. . இவை முதலில் இங்கிலாந்து, பிரேசில், தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு மற்ற நாடுகளுக்கும் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குட் நியூஸ்! இந்தியாவில் கொரோனா 3வது அலை பாதிப்பு பெரிதாக இருக்காது! ஐ.சி.எம்.ஆர். தகவல்!

இந்தியாவில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா மாநிலங்களில் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவை பொறுத்தவரை கொரோனா 2வது அலை அளவுக்கு 3வது அலை மிக கடுமையாக இருக்காது.

கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் முறையான கொரோனா அணுகுமுறைகள் ஆகியவை இந்த அலைகளை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். டெல்டா பிளஸ் கொரோனா மீதான தீவிரமான ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை இந்தியாவில் 10 மாநிலங்களில் 49 டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது, 3வது அலை கிடையாது. இதனை 3வது அலை எனக் கூறுவது தவறான வழிகாட்டுதல் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

From around the web