குட் நியூஸ்! வட்டி விகிதங்களில் மாற்றம் கிடையாது! ரிசர்வ் வங்கி!

 
குட் நியூஸ்! வட்டி விகிதங்களில் மாற்றம் கிடையாது! ரிசர்வ் வங்கி!


இந்தியாவில் நிதிக்கொள்கை கூட்டம் ரிசர்வ் வங்கியில் 2 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும். இதில் நடத்தப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில், குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம், ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகியவற்றில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்தும் பல்வேறு நிதி கொள்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

குட் நியூஸ்! வட்டி விகிதங்களில் மாற்றம் கிடையாது! ரிசர்வ் வங்கி!


அதன்படி ரிசர்வ் வங்கி தலைமையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற கூட்டத்தில்வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.இந்த கூட்டம் இன்று நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் விடுத்த செய்திக்குறிப்பில் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.

குட் நியூஸ்! வட்டி விகிதங்களில் மாற்றம் கிடையாது! ரிசர்வ் வங்கி!

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும். ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் எந்த மாற்றமும் இல்லாமல் 3.35 சதவீதமாக நீடிக்கும்.மேலும் 2021-2022ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கலாம். இதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா 2வது அலையின் தாக்கத்தினால் சரிந்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

From around the web