கொரோனா மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு! மத்திய அரசு!

கொரோனா மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு! மத்திய அரசு!

இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை மேலும் குறைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

கொரோனா மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு! மத்திய அரசு!

இதன் ஒரு பகுதியாக கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரம் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கொரோனா மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு! மத்திய அரசு!

இந்த கூட்டத்தின் முடிவில் தடுப்பூசிகள் மற்றும் பிற கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான வரி குறித்த பரிந்துரையை ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் வரை நிவாரணம் வழங்கப்படும். தடுப்பூசிகளுக்கு 5 சதவீதம், ஆக்சிமீட்டர் 12 சதவீதம், ஆம்புலன்ஸ் மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் 28 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு! மத்திய அரசு!

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் விடுத்த செய்திக்குறிப்பில் மருந்துகள், ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன் உற்பத்தி சாதனங்கள், சோதனைக் கருவிகள் மற்றும் பிற இயந்திரங்கள் மற்றும் கொரோனா 9 தொடர்பான பிற நிவாரணப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதங்கள் தீர்மானிக்கப் பட்டுள்ளன.

கொரோனா மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு! மத்திய அரசு!

கரும்பூஞ்சை சிகிச்சைக்கான ஆம்போடெரிசன்-பி மருந்துக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லை. மேலும் ஆம்புலன்ஸ், ரெம்டெசிவிர், பல்ஸ் ஆக்சிமீட்டர், கை சுத்திகரிப்பு திரவம் போன்றவைகளுக்கும் ஜி.எஸ்.டி.வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

From around the web