சினிமாவுக்காக மனைவியை கொடுமை செய்த கணவன்!! அடுத்து நடந்த விபரீதம்..!!

 
சினிமாவுக்காக மனைவியை கொடுமை செய்த கணவன்!! அடுத்து நடந்த விபரீதம்..!!

கேரளாவில் கொச்சின் அடுத்துள்ள ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் மோபியா பர்வீன் (21). முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்ட சுஹைல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு தான் சுஹைல் வேலைக்கு எதுவும் செல்லாமல் சும்மா இருப்பது மோபியா பர்வீன்வுக்கு தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் சினிமா படம் எடுப்பதாக கூறி ரூ. 40 லட்சம் வேண்டும் என மோபியா பர்வீன்விடம் கேட்டுள்ளார் சுஹைல். அதற்கு மோபியா பர்வீன் மறுத்திடவே பிரச்னை துவங்கியுள்ளது. தொடர்ந்து மோபியா பர்வீன்விடம் கணவர் சுஹைல் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாமல் நவம்பர் 22-ம் தேதி அன்று அலுவா போலீசில் புகார் அளித்துள்ளார்.

சினிமாவுக்காக மனைவியை கொடுமை செய்த கணவன்!! அடுத்து நடந்த விபரீதம்..!!
மோபியாவின் மாமியார் ரூஹியா, கணவர் சுஹைல் மற்றும் மாமனார் யூசப்

ஆனால் காவல்துறையினர் பிரச்னையை கண்டுகொள்ளாதது போல தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த மோபியா பர்வீன் வீட்டுக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன்னதாக, வரதட்சணை புகாரை கண்டுகொள்ளாத போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு மோபியா பர்வீன் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.

இதையடுத்து மோபியா பர்வீன்வின் கணவன் சுஹைல் குடும்பத்தினரை போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் மகளின் புகாரை கண்டுகொள்ளாத போலீசார் மீது நடவடிக்கைக் கோரி மோபியா பர்வீன்வின் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சினிமாவுக்காக மனைவியை கொடுமை செய்த கணவன்!! அடுத்து நடந்த விபரீதம்..!!
விஸ்வமயா

முன்னதாக கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த விஸ்மயா என்கிற வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் வரதட்சணை கொடுமையால் கேரளாவில் மற்றொரு பெண் தற்கொலை செய்துகொண்டு இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web