‘எனக்கு கிடைக்காதவ யாருக்கும் கிடைக்க கூடாது...’ காதல் கொண்டேன் பட ஸ்டைலில் காதலர்களை சுட்டுக் கொன்ற இளைஞர்!
தன்னுடன் நெருங்கிப் பழகிய தோழியை ஒருதலையாக காதலித்து வந்த இளைஞர், தன்னுடைய தோழி, தனக்கு அறிமுகமான வேறொரு நண்பரைக் காதலித்து வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளது அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இருவரையும் சுட்டுக் கொன்ற பின்னர், காதல் கொண்டேன் திரைப்பட பாணியில் இளைஞரும் தற்கொலைச் செய்து கொண்டார். மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டம், செஹோர் மாவட்டத்தில் உள்ள ரெஹ்தி கிராமத்தைச் சேர்ந்தவர் அபிஷேக் யாதவ் (26). இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த சினேகா ஜாட் (22) என்பவரை தீவிரமாக காதலித்து வந்தார். அபிஷேக் தனது காதலையும் சினேகாவிடம் கூறினார். ஆனால் அவரது காதலை சினேகா ஏற்கவில்லை. இருப்பினும், அபிஷேக் சினேகாவை ஒருமனதாக காதலித்து வந்தார்.

இதற்கிடையில், சினேகா அதே கல்லூரியில் படிக்கும் தனது உறவினரான தீபக்கை காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம். இதை பார்த்த அபிஷேக் அதிர்ச்சி அடைந்தார். பல வருடங்களாக தான் மனதார நேசித்த காதலி வேறொருவரை காதலிப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காதலியை வேறு யாரும் பெற முடியாது என்று முடிவு செய்தான்.
இந்நிலையில் நேற்று மாலை சினேகாவும், தீபக்கும் கோவிலுக்கு சென்றனர். இவர்களை தொடர்ந்து அபிஷேக் யாதவ் சென்றுள்ளார். வழியில் அவர்களை வழிமறித்து அபிஷேக் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். இதில் சினேகா, தீபக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதை பார்த்த அபிஷேக் யாதவ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், அபிஷேக் இறந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் காதல் விவகாரத்தில் நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணை நடந்து வருவதாக இந்தூர் துணை போலீஸ் கமிஷனர் மீனா தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!
