‘புதுசு கண்ணா புதுசு...’ வந்தே பாரத் ரயிலை ஓட்ட லோகோ பைலட்டுகள் சண்டை... வைரலாகும் வீடியோ!

 
வந்தே பாரத் வந்தே பாரத்

’இது புதுசு கண்ணா புதுசு’ என்கிற தினுசுல் புது வந்தே பாரத் ரயில் ஓட்ட லோகோ பைலட்டுகளுக்கிடையே நிகழ்ந்த சண்டை வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைகளின் அடிப்படையில் இவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஆக்ரா- உதய்பூர் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும்  புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுவதற்காக லோகோ பைலட்டுகள் சண்டையிட்டுக் கொண்டனர்.

இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில்  லோகோ பைலட் மற்றும் அவரது உதவியாளர்கள் தாக்கப்பட்டதுடன், ரயிலின் மேலாளர் அறையில் கண்ணாடி ஜன்னல்கள் சேதம் அடைந்துள்ளதால் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

வந்தே பாரத்

புதிய வந்தே பாரத் ரயில் இயக்க லோகோ பைலட் சண்டையிட்ட காட்சியை ரயில் நிலையத்தில் பயணம் செய்ய காத்திருந்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார் . இதனை கண்ட ரயில்வே போலீசார் அவர்களை  விலக்கி விட முயன்றதும் இந்த பதிவில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் தீவிர   விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட வந்தே பாரத் ரயில் அதிக நவீன சொகுசு வசதிகளுடன் உருவாக்கப்பட்டு இருந்தது  குறிப்பிடத்தக்கது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!