அமெரிக்காவில் மகள் கண்முன்னே இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொலை!

 
அமெரிக்காவில்  சுட்டுக்கொலை

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் உள்ள ஜாக்சன் நகரில், குஜராத்தைச் சேர்ந்த இந்தியத் தொழிலதிபர் ஒருவர் கொள்ளையனால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் மகிசானா மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் (62), அமெரிக்காவில் வசித்து வந்த நிலையில், கடந்த வாரம்தான் ஜாக்சன் நகரில் புதிதாக மதுபான விற்பனைக் கடை ஒன்றை விலைக்கு வாங்கியிருந்தார்.

சம்பவத்தன்று சுரேஷ் தனது 19 வயது மகளுடன் கடையில் இருந்தபோது, திடீரென ஆயுதத்துடன் உள்ளே நுழைந்த கொள்ளையன் ஒருவன், துப்பாக்கியைக் காட்டிப் பணத்தைப் பறிக்க முயன்றான். பணம் தருவதில் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கொள்ளையன் சுரேஷை நோக்கித் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டான். மகளின் கண்முன்னேயே படுகாயமடைந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தப்பியோடிய கொலையாளியைப் பிடிக்க உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.