ரூ.45 கோடியைத் தட்டித் தூக்கிய இந்திய இளைஞர்... அமீரக லாட்டரியில் ஜாக்பாட்!

 
லாட்டரி

அதிர்ஷ்டம் கூரையைப் பிய்ச்சுக்கிட்டு கொடுக்கும்னு சொல்வாங்க இல்லையா? அந்த மாதிரி... ஒன்னு ரெண்டு கோடி கிடையாது... மொத்தமாக ரூ.45 கோடிகளை தட்டித் தூக்கியிருக்கிறார் கேரளத்தைச் சேர்ந்த ஸ்ரீஜூ என்பவர். அமீரக லாட்டரி சீட்டு வாங்கிய ஸ்ரீஜூவுக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. இந்த 

தமிழகத்தில் தடைச் செய்யப்பட்டிருந்த லாட்டரி சீட்டுகள், பிற மாநிலங்களில் படுஜோராக விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது.  நமது அண்டை மாநிலமான கேரளத்திலும் லாட்டரி சீட்டுக்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 

ஸ்ரீஜூ

அப்படி கேரளாவில் லாட்டரி சீட்டு வாங்கிய பழக்கத்தில், கடந்த 11 ஆண்டுகளாக அமீரகத்தில் பணிபுரிந்து வரும் 39 வயதான ஸ்ரீஜூ, லாட்டரி சீட்டு வாங்கியிருக்கிறார்.

எண்ணெய் நிறுவனம் ஒன்றில் கன்ட்ரோல் ரூம் ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் ஸ்ரீஜூவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். தன்னுடைய பிறந்த ஊரில் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்கிற ஸ்ரீஜூவின் நீண்ட நாள் கனவு இப்போது நிறைவேறப் போகிறது.  பலமுறை லாட்டரி வாங்கி ஏமாந்திருக்கும் ஸ்ரீஜூவால் தான் வாங்கிய 154வது மஹ்சூஸ் லாட்டரி குலுக்கலின் இணையதளத்தில் தனது லாட்டரி எண்ணினை சரிபார்த்தார். இந்திய மதிப்பில் ரூ45 கோடி  பரிசு தொகை, ஸ்ரீஜூ வாங்கிய லாட்டரிக்கு கிடைத்திருக்கிறது. 

ஸ்ரீஜூ

அதிகாரபூர்வமாக லாட்டரி நிறுவனத்திடமிருந்து இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்ட பிறகே ஸ்ரீஜூவுக்கு நம்பிக்கை வந்தது. 11 ஆண்டுகளாக அமீரகத்தில் தான் பட்ட சிரமங்களுக்கெல்லாம் விடிவு கிட்டியதாக மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார். பெரிய தொகை கிடைத்தால் ஊரில் நல்லதாக ஒரு வீடு கட்டலாம் என்பதற்கு அப்பால் அவர் அதிகம் யோசித்ததில்லை. தற்போது அடித்த ஜாக்பாட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று இன்னும் முடிவெடுக்க முடியாது ஆனந்தக் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார் ஸ்ரீஜூ.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web