உஷார் மக்களே... இதைப் பண்ணவே பண்ணாதீங்க... இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்... வைரலாகும் வீடியோ!

 
தெருநாய்

இதை செய்யவே செய்யாதீங்க மக்களே... உணவுமுறை நமக்கு மட்டும் மாறிவிடவில்லை. நாம் வளர்க்கும் பிராணிகளுக்கும் உணவு முறை மாறி விட்டது. பெற்றோர்களை எதிர்த்து பேசாத தலைமுறை எப்படி தவறான உணவு பழக்கத்தாலும், வளர்ப்பு முறையாலும் மாறியதோ அதைப் போலவே வளர்ப்பு பிராணிகளும் தங்கள் இயல்பில் இருந்து மாறி வருகின்றன.

நாடு முழுவதுமே சமீப காலங்களாக நாய்களின் தொல்லை அதிகரித்து வருவது இதனால் தான். பல இடங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்படுகின்றன. தெருநாய் என்பது மட்டுமல்லாமல் பல இடங்களிலும் வளர்ப்பு நாய்களே கடித்து குதறுகின்றன.


அந்த வகையில், ஒரு மனிதனுக்கும் தெருநாய்களுக்கும் இடையே நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவத்தை இந்த வீடியோ படம் பிடிக்கிறது. இந்த வீடியோவில், ஒரு நபர் சாலையில் நிற்கிறார், அருகில் இருக்கும் தெருநாயைச் செல்லமாக அழைக்கிறார். அதன் பின் பரிதாபம் பார்த்து அதைக் கொஞ்சுகிறார். தடவித் தருகிறர்.

பின்னர் தெருநாயின் தலையை அன்புடன் தட்டுகிறார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த நாய் சிறிது நேரத்தில் அவரைத் தாக்கத் தொடங்கியது, தாக்குதலில் அவர் காயமடைந்தார். இச்சம்பவத்தில் எதிர்பாராத திருப்பமாக அந்த நாய் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அவரை தாக்கி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வீடியோ வைரலானதையடுத்து, பழக்கமில்லாத தெருநாய்களை அணுகும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு விலங்கு நல நிபுணர்கள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தெருநாய்களை கையாளும் போது பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தேவை என்பதை நினைவூட்டுகிறது. நாய் அவரைக் கடித்ததில், மருத்துவமனை சிகிச்சை எடுத்து வந்து கிட்டத்தட்ட 2 மாத காலத்திற்குப் பிறகு முழுவதுமாக குணமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web