வயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில் 5கிமீ ஜீப்பை ஓட்டி 15 பேர் உயிரை காத்த ஓட்டுனர்!

 
பீகார் பீகார்

 பீகார் மாநிலத்தில் வசித்து வரும் ஜீப் ஓட்டுனர்  சந்தோஷ் சிங், இவர் கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச்சென்றுவிட்டு திரும்புகையில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் வயிற்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.  ஜீப்பில் இருந்த 15 பயணிகளை அப்படியே விட்டுவிடாமல், அவர்களது பாதுகாப்புதான் முக்கியம் என கருதி 5 கி.மீ. தொலைவுக்கு ஜீப்பை வேகமாக ஓட்டி வந்து பயணிகளைக் காப்பாற்றினார்.  

ஓட்டுனர்


ஆனால், வயிற்றில் பாய்ந்த குண்டு அவரது குடல் பகுதிகளை கடுமையாக சேதமடையச் செய்துவிட்டது.இதனையடுத்து   அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.அவரது ஒட்டுமொத்த வயிற்றுப் பகுதியும் சேதமடைந்திருப்பதால் சிக்கலான மிகப்பெரிய அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கு  பிறகு தான் எதுவும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில் தற்போது உடல்நிலை  சீராக இருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறுவை சிகிச்சை

அவர் மீது நடத்தப்பட்டது பயங்கரவாத தாக்குதலா, உள்ளூர் கொள்ளை கும்பலின் தாக்குதலா என பீகார் மாநில காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் வந்த வாகனத்தைக்கொண்டு அவர்களை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  கூறப்படுகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!