இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

உலக பிரசித்தி பெற்றது திருப்பதி தேவஸ்தானம். இங்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இது குறித்து தேவஸ்தானம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திருப்பதி தேவஸ்தானத்தின் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்திகளை பலர் பரப்பி வருகின்றனர்.

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

இதனை யாரும் நம்ப வேண்டாம். இதே போல் கடந்த காலத்தில் பல மோசடி வேலைகள் நடைபெற்றன. அவர்கள் கண்டறியப்பட்டு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

தேவஸ்தானத்தில் ஆட்கள் தேவை எனில் முன்னதாகவே பத்திரிகை மற்றும் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்.இதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.பொய் பிரசாரம் செய்பவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

From around the web