அதிர்ச்சி வீடியோ... பயங்கர தீ விபத்து... 34 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்!

 
டெல்லி தீ விபத்து

டெல்லியின் அலிபூரில் உள்ள ஒரு தொழிற்சாலையின் குடோனில் இன்று அதிகாலை 6:15 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 
தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏற்பட்டது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


 

தகவல் அறிந்தவுடன், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீ விபத்துக்கான காரணம் ஷார்ட் சர்க்யூட் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது பிரபல வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிப்பாளரான வேர்ல்ப்பூல் கம்பனிக்கு சொந்தமான குடோன் என்றும், அதில் எண்ணெய் மற்றும் ஃபிரிட்ஜ்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web