குஷியில் வாகன ஓட்டிகள்... செப்.19ம் தேதி வரை இந்த பகுதி முழுக்க டோல் கட்டணங்கள் ரத்து | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்!

 
விநாயகர் பிள்ளையார் டோல் சதுர்த்தி விநாயகர் பிள்ளையார் டோல் சதுர்த்தி
கொங்கன் வழித்தடத்தில் உள்ள டோல் கட்டணங்கள் அனைத்தும் செப்.17ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் குஷியில் உள்ளனர். நாளை நாடு முழுவதும் இன்று விநாயகர் சதூர்த்தியைக் கொண்டாடி வரும் நிலையில் வரும் செப்டம்பர் 19ம் தேதி வரை விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களுக்கு கொங்கன் வழித்தடத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடி கட்டணங்களையும் ரத்து செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொங்கன் வழித்தடத்தில் சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வாகனங்கள் அதற்கான தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

சுங்கச்சாவடி

விநாயகர் சதூர்த்தி விழாவை ஒட்டி மகாராஷ்டிரா அரசாங்கம் கொங்கன் வழித்தடங்களில் உள்ள சுங்கச் சாவடிகளை கடக்கும் வாகனங்கள் அதற்கான தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

இம்மாதம் செப்டம்பர் 19ம் தேதி வரை மகாராஷ்டிரா மாநிலத்தின் கொங்கன் வழித்தடத்தை கடக்கும் பயணிகள் சுங்க கட்டணம் மற்றும் சாலை வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பான அறிவிப்பை அம்மாநில பொதுப்பணி துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. 

மும்பை - பெங்களூரு மற்றும் மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்கள் இன்று முதல் செப்டம்பர் 19-ம் தேதி வரை சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வாகனங்கள் சாலை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவதற்கு ஆர்டிஓ அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல் துறையிடம் இருந்து அனுமதி சீட்டை பெற வேண்டும். இதற்கான படிவத்தை அம்மாநில பொதுப்பணி துறை வெளியிட்டுள்ளது. 

சுங்கச்சாவடி

ஒவ்வொரு ஆண்டும் விநாயக சதுர்த்தி விழாவை கொண்டாட மும்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கடலோர கொங்கன் பகுதியில் உள்ள தங்கள் சொந்த இடங்களுக்கு செல்கின்றனர். திருவிழாவை முன்னிட்டு மும்பையில் இருந்து மட்டும் கொங்கனுக்கு செல்லும் பயணிகளை பல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஏற்றி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா