அமேசான் மீது கஞ்சா விற்பனை புகார் கூறும் ம.பி அமைச்சர்..!

 
அமேசான் மீது கஞ்சா விற்பனை புகார் கூறும் ம.பி அமைச்சர்..!

கஞ்சாவை ஆன்லைன் மூலம் விற்பனை செய்த விவகாரத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அமேசான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய பிரதேசத்திலுள்ள பிந்த் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை பிரதான தொழிலாக கொண்ட நிறுவனம் கடந்த வாரம் போலீசாரிடம் பிடிப்பட்டது. அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் அந்நிறுவனம் கஞ்சா விற்பனையை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

அமேசான் மீது கஞ்சா விற்பனை புகார் கூறும் ம.பி அமைச்சர்..!

இதற்காக அமேசான் நிறுவன அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் அவர்கள் எந்தவிதமான பதிலும் வழங்கவில்லை. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா,

அமேசான் நிறுவனத்தை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்யப்பட்டு இருப்பது சாதாரணமான விஷயமல்ல். ஆன்லைன் வர்த்தகத்துக்கு என்று விதிகள் வகுக்கப்படுவது கிடையாது. வேண்டுமானால் அமேசானை பயன்படுத்தி ஆயுதங்கள் கூட விற்பனை செய்யலாம்.

அமேசான் மீது கஞ்சா விற்பனை புகார் கூறும் ம.பி அமைச்சர்..!

இதுபோன்ற தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ம.பி அரசு விசாரணைக்கு அமேசான் ஒத்துழைக்காவிடால், விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் உயர் அதிகாரிகள் கைது செய்யப்படவும் தயங்கமாட்டோம் என அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா எச்சரித்துள்ளார்.

From around the web