நடுரோட்டில் நிர்வாணநிலையில் இளம்பெண்ணின் உடல்... தலையில்லாமல் வீசி சென்ற கொடூரம்!

 
போலீசார் இளம்பெண் நிர்வாணம் கொலை போலீசார் இளம்பெண் நிர்வாணம் கொலை

தேசிய நெடுஞ்சாலையில், நடுரோட்டில் நிர்வாண நிலையில், தலை வெட்டப்பட்ட நிலையில், இளம்பெண்ணின் சடலம் தலையில்லாமல் வீசப்ப்பட்டிருந்தது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து, நெடுஞ்சாலையில் வீசப்பட்ட இளம்பெண் யார்?  எதற்காக கொலைச் செய்யப்பட்டார்? எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கான்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இளம்பெண் ஒருவரின் தலையற்ற உடல் நிர்வாணமாக வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அந்த இளம்பெண் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படும் நிலையில், போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். 

இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை என்பதாலும், நிர்வாண உடலில் இளம்பெண்ணின் தலை இல்லாததாலும் அவர் யார் என்று கண்டுபிடிப்பதில் சிரமம் இருப்பதாகவும், சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து 3 கி.மீட்டர் தள்ளி உள்ள ஒரு சிசிடிவி கேமராவில்  இளம்பெண் மட்டும் தனியே நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை நடந்து வரும் நிலையில், கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டாரா? அல்லது காதல் கொலையா? என்கிற ரீதியில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரிக்க போலீசார் 4 தனிப்படைகள் அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!