அட கடவுளே... இப்பயெல்லாமா சாவு வரும்?! ரசகுல்லா தொண்டையில் சிக்கி கல்லூரி மாணவன் மரணம்!

 
ரசகுல்லா ரசகுல்லா

கல்லை சாப்பிட்டாலும் செரிக்கிற வயசுன்னு நம்ம ஊரு கிராமத்துல சொல்லி வளர்ப்பாங்க.. ஆனா அதெல்லாம் போன தலைமுறையோட போச்சு போல... ‘சீடை’ ன்னா வாட் மம்மி? என்று கேள்வி கேட்குது இந்த தலைமுறை. இதற்கு இந்த தலைமுறையை குற்றம் சொல்ல முடியாது.. இப்படியானதொரு தலைமுறையை நாம தானே உருவாக்கி வெச்சிருக்கோம்? அப்போ கூட்டுக் குடும்பங்களைத் தொலைத்து  புறா கூண்டுகளைப் போல அபார்ட்மெண்ட் வாழ்க்கைக்கு பழகிய நாம தான் அடுத்த தலைமுறையை சீரழிச்சு வெச்சிருக்கோம்.. இது அதைப் பற்றிய செய்தி கிடையாது.

ரசகுல்லா சாப்பிட்டு கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ஜார்கண்ட் மாநிலம் சிங்பூமில் 17 வயது மாணவன் ஒருவர் ரசகுல்லா சாப்பிட்டுக் கொண்டே செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, ரசகுல்லா தொண்டையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ரசகுல்லா

இது குறித்து வெளியான தகவல்களின் படி இச்சம்பவத்திற்குப் பிறகு சிறுவன் சில நிமிடங்களுக்கு மூச்சுவிடவே சிரமப்பட்டுள்ளான். இச்சிறுவனின் பெயர் அமீத் சிங். இவரது மாமா வெளியூரீல்  தங்கி பணிபுரிபவர். இவர் பணிமுடித்து 3 மாதங்களுக்கு பிறகு வீடு திரும்பிய நிலையில் சிறுவனுக்கு பிடிக்கும் என நினைத்து வரும்போது ரசகுல்லா வாங்கி வந்தார். இந்நிலையில் சிறுவன் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டே ரசகுல்லாவை சாப்பிட்டுள்ளான். அப்போது, ரசகுல்லா சிறுவனின் தொண்டையை அடைத்துள்ளது.

ஆம்புலன்ஸ்

சிறுவன் மூச்சுவிட சிரமப்படுவதைப் பார்த்த அமித் சிங்கின் மாமா அவரை உட்கார வைத்து ரஸகுல்லாவை வெளியே எடுக்க எவ்வளவோ முயற்சித்தும் அவரால் வெளியே எடுக்க முடியவில்லை. சில நிமிடங்களில் சிறுவன் மயங்கி சரிந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா