அடேங்கப்பா... மொத்தம் ரூ.850 கோடி: அணு குண்டு தயாரிக்க உதவும் கலிபோர்னியம் பீகாரில் சிக்கியது!
பீகார்ர் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியில் அணு குண்டுகள் தயாரிக்க உதவும் கலிஃபோர்னியத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கலிஃபோர்னியத்தின் சந்தை மதிப்பு ரூ.850 கோடி.
கலிஃபோர்னியத்தைக் கடத்த முயன்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

50 கிராம் எடையுள்ள கலிஃபோர்னியத்தை போலீசார் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். 50 கிராம் கலிஃபோர்னியத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.850 கோடியாகும்.
அம்மாநில சிறப்பு அதிரடிப் படை குச்சாய்கோட் போலீசாருடன் இணைந்து நடத்திய வாகன சோதனையின் போது கடத்த முயன்றவர்கள் சிக்கினார்கள்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
