இன்று குஜராத்தில் பிரதமர் மோடி... இந்தியாவின் முதல் ‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார்!

 
மோடி வந்தே பாரத் துவக்கம் மோடி வந்தே பாரத் துவக்கம்
இன்று குஜராத் மாநிலத்தில் இந்தியாவின் முதல் முன்பதிவில்லா வந்தே மெட்ரோ’ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மக்களின் தேவைகளின் அடிப்படையில் முன்பதிவில்லா வந்தே பாரத் ரயில்களை இயக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது.

வந்தே பாரத்

அதன்படி இன்று செப்டம்பர் 16ம் தேதி திங்கட்கிழமை பிரதமர் மோடி தனது இரண்டு நாள் குஜராத் பயணத்தில், குஜராத் மாநிலம் அகமதாபாத் – புஜ் இடையேயான வந்தே மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். ‘வந்தே மெட்ரோ’ ரயில்கள் முழுவதும் குளிர்சாதன பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லா ரயிலாக இயக்கப்பட உள்ளன.

இது குறித்து மேற்கு ரயில்வே (அகமதாபாத் பிரிவு) மக்கள் தொடர்பு அதிகாரி பிரதீப் சர்மா,  “வந்தே மெட்ரோவில் பயணம் செய்ய புறப்படுவதற்கு சற்று முன் பயணிகள் கவுண்ட்டரில் இருந்து இந்த ரயிலுக்கான டிக்கெட்டுகளை பயணிகள் வாங்கிக் கொள்ளலாம். இந்த ரயிலில் 2,058 பயணிகள் நின்று கொண்டும், 1,150 பயணிகள் அமர்ந்தபடியும் பயணம் செய்யும் வகையில்  உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  

வந்தே பாரத்

அகமதாபாத்-புஜ் வந்தே மெட்ரோ சேவை 9 ரயில் நிலையங்களில் நின்று 360 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி 45 நிமிடங்களில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் கடக்கும். இது புஜில் இருந்து தினசரி காலை 5:05 மணிக்கு புறப்பட்டு 10:50 மணிக்கு அகமதாபாத் சந்திப்பை அடையும் ” எனத் தெரிவித்துள்ளார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா