ரூ1000 வெள்ள நிவாரணத் தொகை!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

ரூ1000 வெள்ள நிவாரணத் தொகை!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் நேற்று மாலை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன் தாக்கம், தெற்கு ஆந்திரா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளிலும் காணப்பட்டது.

ரூ1000 வெள்ள நிவாரணத் தொகை!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

தமிழக எல்லையை ஒட்டியுள்ள சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் காளஹஸ்தி, திருப்பதி, தடா, சூளூர்பேட்டை, ஸ்ரீஹரிகோட்டா பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

ரூ1000 வெள்ள நிவாரணத் தொகை!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

தெற்கு ஆந்திரா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளில் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ரூ1000 வெள்ள நிவாரணத் தொகை!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “வெள்ளம் சூழப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வையுங்கள்.வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து உள்ள குடும்பங்களுக்கு உடனடியாக 1000 ரூபாய் வழங்கப்படும். மரங்களை அப்புறப்படுத்துதல் மின்கம்பங்களை சீரமைத்தல் ஆகிய பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web