அதிர்ச்சி... எல்லை தாண்டிய போலீஸ் எஸ்.ஐ., கையில் கட்டு கட்டாக அமெரிக்க டாலர்கள்!

 
ஜான் செல்வராஜ்

சென்னையை அடுத்த தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக ஜான் செல்வராஜ் பணியாற்றி வந்தார். அவர் நீண்ட காலமாக நீதிமன்ற விவகாரங்களை கவனித்து வருகிறார். இதனால் பல குற்றவாளிகளுடன் அவருக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த ஜான் செல்வராஜ், மடிப்பாக்கம் சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அவர் அடிக்கடி நீண்ட விடுமுறை எடுத்து வந்த நிலையில், மருத்துவ விடுப்பில் சென்றவர் தற்போது வங்கதேச ராணுவத்தின் பிடியில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் தமிழக காவல்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற கடமைக்காக குற்றவாளிகளை  காவல் நிலையத்திற்கு ஏற்றிச் செல்லும் நபர் சட்டவிரோத கும்பலுடன் தொடர்புடையவரா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜான் செல்வராஜ் குறித்து சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, வங்கதேச எல்லையில் கைது செய்யப்பட்ட சேலையூர் எஸ்ஐ, செல்வராஜ் 7,500 அமெரிக்க டாலர்களுடன் பிடிபட்டார். அவரிடம் இந்திய பணமும் ரொக்கமாக இருந்ததாகவும், அதனால் அவருக்கு போதைப்பொருள் கடத்தல், தங்கம் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடந்து வருகிறது.

மேலும், இதேபோல் பல்வேறு பிரச்னைகளால் 10 ஆண்டுகளாக சஸ்பெண்டில் இருந்த எஸ்ஐ ஜான் தற்போது தான் செல்வராஜ் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். ஜான் செல்வராஜ் விவகாரம் தொடர்பாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web