நாடு முழுவதும் பரபரப்பு... குழந்தைகள் காப்பகத்தில் உணவருந்திய 4 குழந்தைகள் மரணம்... 37 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

 
மருத்துவமனை புட் பாய்சன் விஷம் மருத்துவமனை புட் பாய்சன் விஷம்

நேற்று முன் தினம் உத்தரபிரதேச மாநிலத்தில் காலை சிற்றுண்டியின் போது சமோசா சாப்பிட்ட 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பதற்றம் தணிவதற்குள், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மதவாத அமைப்பினால் நடத்தப்பட்டு வரும் அனாதை இல்லத்தில் உணவில் விஷம் கலந்து 4 குழந்தைகள் உயிரிழந்தனர், 37 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இன்றுகாலை ஆந்திர மாநிலத்தில் மத அமைப்பு நடத்தும் அனாதை இல்லத்தில் விஷம் கலந்து உணவு சாப்பிட்டப்பட்டதாக கூறப்படும் நிலையில், சிகிச்சைக்காக ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 4 குழந்தைகள் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தனர், மேலும் 37 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


ஆந்திரபிரதேச மாநிலம், அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள கோடவுரத்லா மண்டல் கைலாச பட்டினம் பகுதியில் உள்ள ஆராதனா அறக்கட்டளை என்ற மத அமைப்பினால் நடத்தப்படும் விடுதியில் உணவு உண்ட குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனகாபள்ளி மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 37 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அனகாப்பள்ளி மாவட்ட ஆட்சியர் விஜய கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து வெளியான செய்திகளின்படி, குழந்தைகளுக்கு சாப்பிட சமோசா வழங்கப்பட்டது. சமோசா சாப்பிட்ட 37 மாணவர்களுக்கு உணவு விஷம் கலந்ததால் வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்களில், கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 14 குழந்தைகள், நர்சிபட்டினம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர்.

மருத்துவமனை விஷம்

நான்கு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் மேல் சிகிச்சைக்காக விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு (கேஜிஹெச்) மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த 4 மாணவர்கள் அனகாபள்ளியில் உள்ள அனாதை இல்லத்தில் வசிப்பவர்கள், அங்கு 80 மாணவர்கள் வசிக்கின்றனர்.

உயிரிழந்தவர் முதலாம் வகுப்பு படிக்கும் ஜோசுவா மற்றும் மூன்றாம் வகுப்பு படிக்கும் பவானி மற்றும் ஷ்ரத்தா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பள்ளியைச் சேர்ந்த 86 மாணவர்களில் 37 பேர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா