ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை... ரயில்வே ஊழியரை அடித்தே கொன்ற பயணிகள்!

 
பாலியல் தொல்லை பாலியல் தொல்லை

டெல்லிக்கு சென்றுக் கொண்டிருந்த ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுக் கொண்டிருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைத் தந்த ரயில்வே ஊழியரை சிறுமியின் உறவினரும், பயனிகளும் அடித்தே கொன்ற சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பீகாரில் இருந்து டெல்லிக்கு சென்றுக் கொண்டிருந்த ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவான் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பயணம் செய்தனர். இரவு 11.30 மணியளவில், குரூப் டி ரயில்வே ஊழியர் பிரசாந்த் குமார் என்பவர், அந்த குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை தனது இருக்கையில் உட்கார வைத்தார்.

ரயில்

பின்னர், சிறுமியின் தாய் கழிவறைக்கு சென்ற சமயம் பார்த்து, ​​அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. தனது தாய் கழிவறையை விட்டு வெளியே வந்ததும் அவரிடம் ஓடிச்சென்ற சிறுமி, தனது தாயைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள்.

அதன் அவர் தனது தாயை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று நடந்ததை கூறினார். பின்னர், ரயிலின் எம்1 பெட்டியில் இருந்த தனது கணவர், மாமனார் மற்றும் பிற பயணிகளிடம் தாய் கூறினார். ரயில் லக்னோவில் உள்ள ஐஷ்பாக் சந்திப்பை அடைந்ததும், கோபமடைந்த பயணிகள் மற்றும் குடும்பத்தினர் ரயில் ஊழியர் குமாரைப் பிடித்து, ரயில் பெட்டி கதவுகளுக்கு அருகிலுள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று, ரயில் கான்பூர் சென்ட்ரல் வரும் வரை அவரைத் தாக்கினர்.

கொலை

நேற்று அதிகாலை 4.35 மணியளவில் ரயில் கான்பூர் சென்ட்ரல் வந்தடைந்தபோது, ​​அரசு ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி) அதிகாரிகள் குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமியின் குடும்பத்தினர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்த நிலையில், குமாரின் குடும்பத்தினர் கொலை புகார் அளித்துள்ளனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா