மீண்டும் அதிர்ச்சி... நெடுஞ்சாலையில் வீசப்பட்ட சூட்கேஸில் இளம்பெண் சடலம்!

 
சிவப்பு சூட்கேஸ்

நாடு முழுவதும் இளம்பெண்களைக் கொலை செய்து விட்டு பெரிய சூட்கேஸில் அடைத்து வீசி செல்லும் பழக்கம் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆன்லைன் ஷாப்பிங் இவர்களுக்கு உதவும் நிலையில் விதவிதமாக கொலைச் செய்ய திட்டமிடுகிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொலைச் செய்து விட்டு பெரிஅ பெரிய சூட்கேஸில் அடைத்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக வீசி விட்டு செல்கிறார்கள். பெங்களூருவில் அடுத்தடுத்து கடந்த 6 மாதங்களில் இப்படி நான்கு பெண்கள் கொலைச் செய்யப்பட்டு சூட்கேஸில் அடைத்து வீசப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் டெல்லி - லக்னோ நெடுஞ்சாலையில் கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற சூட்கேஸில் இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. நெடுஞ்சாலையின் சர்வீஸ் ரோட்டில் சூட்கேஸ் கிடப்பதை அவ்வழியாக சென்றவர்கள் கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சூட்கேசை திறந்து பார்த்தபோது, ​​உடல் முழுவதும் காயங்களுடன் ஒரு பெண் இருப்பதைக் கண்டனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

குறித்த பெண்ணுக்கு 25 முதல் 30 வயது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட அறிக்கை கிடைத்ததும், தடயவியல் நிபுணர்களுடன் போலீஸ் குழு சம்பவ இடத்துக்கு விரைந்தது. விசாரணை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, சூட்கேஸைச் சுற்றியுள்ள பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. சூட்கேஸில் இருந்து பெண்ணின் உடலை அகற்றிய அதிகாரிகள் அதை முழுமையாக ஆய்வு செய்தனர். அதில் சில ஆடைகளும் இருந்தன.

போலீஸ்

இது குறித்து பேசிய துணை போலீஸ் சூப்பிரண்டு வினீத் பட்நாகர், “உடல் கண்டெடுக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே பெண் இறந்திருக்கலாம் என அவரது காயங்கள் தெரிவிக்கின்றன. போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, பெண்ணின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை தொடங்கியுள்ளனர்’ என்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 

 கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web