காயங்குளத்தில் அதிர்ச்சி... மிளகாய்ப் பொடி தூவி பலாத்காரம்... 29 வயசு பையன் வெறிச்செயல்!
கேரளாவின் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் பகுதியில் 70 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். கனகாகுன்னு பகுதியைச் சேர்ந்த தனேஷ் (வயது 29) என்ற இளைஞர் நோட்டமிட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு, தனேஷ், மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று, மிளகாய்ப் பொடியால் தாக்கியுள்ளார்.

கொள்ளையடிக்க வந்த நபர் மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின், 7 பவுன் தங்க நகைகளை திருடி, வீட்டின் கதவை வெளியில் பூட்டிவிட்டு தப்பியோடினார். தப்பி ஓடியபோது, மூதாட்டியின் மொபைல் போனையும் எடுத்துச் சென்றுள்ளார்.இதனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

நேற்று காலை அவரை பார்த்த அக்கம் பக்கத்து வீட்டு பகுதியில் வசிப்பவர்கள் தகவலறிந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே 7 பவுன் தங்க நகைகளை விற்க முயன்ற தனேஷ் என்பவரை போலீசார் கைது செய்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
