ஐஐடி விடுதியில் அதிர்ச்சி.. கல்லூரி மாணவர் மர்ம மரணம்.. போலீசார் விசாரணை!
நாடு முழுவதும் திறமையான மாணவர்கள் சேர்ந்து படிக்க விரும்பும் கல்லூரிகளில் முதன்மையானதாக விளங்கி வரும் ஐஐடி கல்லூரிகளில் கடந்த சில வருடங்களாகவே மாணவ, மாணவிகள் தற்கொலைச் செய்து கொள்ளும் போக்கும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அசாம் மாநில ஐஐடி கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் இந்திய தொழில்நுட்பக் கல்லூரி (ஐஐடி) இயங்கி வருகிறது. இங்கு ஏராளமானோர் படித்து வருகின்றனர். பிம்லேஷ் குமார் என்ற மாணவரும் படித்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று கல்லூரி விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர், பிம்லேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிம்லேஷின் மரணம் கொலையா?, தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தை கண்டித்து ஐஐடி விடுதியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
