பகீர் வீடியோ.. விமான நிலையத்திற்குள் தறிகெட்டு ஓடிய சொகுசு பேருந்து!
நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ தான் வைரலாகி வருகிறது. நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து ஹெச்எஸ்ஆர் லேஅவுட் நோக்கி சென்றுக் கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று திடீரென பெங்களூரு ஹெப்பல் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தறிகெட்டு ஓடியபடியே எதிரே வந்த பைக் மற்றும் கார்கள் மீது மோதியது.
Chain accident on Airport Rd in Bengaluru: A BMTC Vayu Vajra bus (KA57F1797) collided with a car near Esteem Mall on Aug 12. It resulted in a chain accident involving 2 cars & a two-wheeler. Two-wheeler rider sustained leg injury. @BMTC_BENGALURU is investigating the cause. pic.twitter.com/SKvkMByX4Z
— ChristinMathewPhilip (@ChristinMP_) August 13, 2024
பஸ் டிரைவர் பிரேக் போட முயன்றும் முடியாமல் போனதால் பஸ் சுமார் 10 வினாடிகள் சாலையில் கவிழ்ந்தது. இருசக்கர வாகனங்கள், கார்கள் விபத்தில் சிக்கியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
