அதிர்ச்சி! பறவைகள் இறந்தால் எச்சரிக்கையாக இருங்க!

 
அதிர்ச்சி! பறவைகள் இறந்தால் எச்சரிக்கையாக இருங்க!

இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல இடங்களில் இன்னும் முழுவதும் முடிவுக்கு வராத நிலையில் 3 வது அலை , கருப்பு பூஞ்சை, புது வைரஸ் , டெங்கு என மக்களை அச்சுறுத்திக் கொண்டே உள்ளது.

இந்நிலையில் அதன் தொடர்ச்சியான பேரதிர்ச்சியாக பறவைகாய்ச்சலும் வந்திருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒரு சிறுவன் பறவை காய்ச்சலால் உயிரிழந்துள்ளான். சிறுவனுக்கு சிகிச்சயளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சி! பறவைகள் இறந்தால் எச்சரிக்கையாக இருங்க!

எச்5 என்8 என்ற வைரஸ் பறவைகளிடம் இருந்து மனிதர்களையும் தாக்கி வருகிறது. இதனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என இதுவரை சொல்லப்பட்டு வந்த நிலையில், சிறுவன் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி! பறவைகள் இறந்தால் எச்சரிக்கையாக இருங்க!

ஹரியானா மாநிலத்தில் வசித்து வந்த 11 வயது சிறுவனுக்கு திடீரென்று காய்ச்சலும், மூச்சுத்திணறலும் இருந்ததால் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையில் சேர்த்துள்ளனர். அதில் சிறுவனுக்கு எச்5 என்8 வைரஸ் தாக்கியிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. உடனடியாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான். இதையடுத்து பறவைகள் எங்கேனும் இறந்து கிடந்தால் எச்சரிக்கையாக இருங்கள் என தேசிய நோய் கட்டுப்பாடு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வைரஸ் கண், மூக்கு, வாய், சுவாசம் வழியாக பரவலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த வைரஸ் தாக்கினால் காய்ச்சல், சளி, தொண்டை வலி, உடல் வலி, தலைவலி, கண்கள் சிவப்பாகுதல், மூச்சு விடுவதில் சிரமங்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் எனவும் தேசிய நோய் கட்டுப்பாடு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

From around the web