அதிர்ச்சி... தண்ணீர் தொட்டியில் மிதந்த சடலம்.. ஒரு வாரமாக அதே தண்ணீரை குடித்த பொதுமக்கள்!

 
ராஜூ

கர்நாடக மாநிலம் பீதார் மாவட்டம் ஆனந்தூர் கிராமத்தில், மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீரில் துர்நாற்றம் வீசியதால், கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். முதலில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து இருக்கலாம் என கருதி அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.அப்படி எதுவும் இல்லாததால் நேற்று மாலை நீர்தேக்க தொட்டியை ஆய்வு செய்தனர்.

அப்போது தண்ணீர் தொட்டியின் மீது வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பீதார் மாவட்டம் ஆனந்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜூ (26) என தெரியவந்தது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவரால் அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனால் மனமுடைந்த ராஜுவும் வீட்டை விட்டு வெளியேறினார். காணமல் போன ராஜுவை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,  தண்ணீர் தொட்டியில் குதித்து ராஜு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில், கடந்த 6 நாட்களாக மக்கள் இந்த தண்ணீரை குடித்து வருவதால், சுகாதாரத்துறையினர் அங்கு மருத்துவ முகாம் அமைத்து மக்களை பரிசோதனை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web