அதிர்ச்சி... மாரடைப்பால் பயிற்சியின் போது 30 வயது விமானி திடீர் மரணம்!

 
ஹிம்மனில்

கொரோனா காலத்திற்கு பிறகான வாழ்க்கை பலருக்கும் பெருந்துயராக மாறி வருகிறது. இளவயதில் மாரடைப்பு அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் பயிற்சியின் போது, 30 வயதேயான ஏர் இந்தியா விமானி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானியாக பணியாற்றிய ஹிம்மனில் குமார் (30) என்பவர், நேற்று காலை முனையம் 3-ல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானம்

இதையடுத்து அவருடன் இருந்த சக பணியாளர்கள் விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

அவர் மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிம்மனில் குமார் சிறிய அளவிலான விமானங்களை ஓட்டிச் செல்லும் விமானி என தெரிகிறது.

மரணம் மாரடைப்பு நெஞ்சுவலி

அவர் பெரிய விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார். விடுமுறைக்கு சென்று மீண்டும் பயிற்சிக்கு வந்த நிலையில், இப்படி ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது.

ஹிம்மனில் குமாரின் கடந்த கால மருத்துவ ஆய்வு முடிவுகள் அனைத்தும் அவரது உடல்நிலை நன்றாகவே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானியின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web