அதிர்ச்சி வீடியோ... வெள்ளத்தில் சிக்கிய கார்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி!
பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், கார் ஒன்று சிக்கிக் கொண்டு அடித்து செல்லப்பட்ட நிலையில், காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இமாச்சல பிரதேச மாநிலம் உனா மாவட்டம் டாரா பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பஞ்சாப் மாநிலம் பகத்சிங் நகருக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக காரில் சென்றுள்ளனர். பஞ்சாப்பின் மேகத்பூர் அருகே வனப்பகுதியில் ஆற்றோரம் நேற்று இவர்களது கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இவர்களது கார் அடித்து செல்லப்பட்டது.
Hoshiarpur, Punjab: Heavy rainfall led to floods sweeping away an Innova car. One passenger was rescued, but ten are missing. Rescue operations are underway. pic.twitter.com/iB2f5RdrWC
— IANS (@ians_india) August 11, 2024
இதில் கார் டிரைவர், குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த கிராமத்தினர் ஒருவரை உயிருடன் மீட்ட நிலையில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட எஞ்சிய 3 பேரை மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
