அதிர்ச்சி வீடியோ... தூங்கிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம்!

 
ஜோத்பூர் சிறுமி ஜோத்பூர் சிறுமி

அந்த வீடியோவைப் பார்ப்பவர்களின் மனசு பதைபதைக்கிறது. பெத்தவங்களோட மனசு என்ன பாடுபட்டிருக்கும்? இப்படித்தான் நாடு முழுவதும் பெண்களுக்கான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், நாம் குற்றங்களைத் தடுக்காமல், நிர்பயா 1, நிர்பயா 2 என்று நம்பர்களைச் சூட்டிக் கொண்டிருக்கிறோம். ராஜஸ்தான் மாவட்டத்தில் அதிகாலை நேரத்தில் அடையாளம் தெரியாத ஒருவரால், பிளாட்பார்மில் தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளியின் மூன்று வயது மகள் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியைக் கூட்டியது.

சிறுமி தனது பெற்றோருடன் கோயிலுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த போது கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. காலை 6:30 மணியளவில் உணவகம் அமைப்பதற்காக சம்பவ இடத்திற்கு வந்த ஒரு பெண் ரோட்டோரத்தில் இருந்த சிறுமியை கண்டெடுத்துள்ளார்.

சிறுமியின் உதடு மற்றும் முதுகில் ரத்தக்காயங்கள் இருப்பதைப் பார்த்து பதறியடித்தப்படி சிறுமியை கண்டெடுத்த பெண் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றதில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தடயவியல் குழுவும் சம்பவ இடத்தை ஆய்வு செய்ய வரவழைக்கப்பட்டது. காவல்துறை உதவி ஆணையர் அனில் குமார் கூறுகையில், சிசிடிவி கேமரா காட்சிகளில், அதிகாலை 2 மணியளவில் ஒரு நபர் சிறுமியை அழைத்துச் செல்வதைக் காட்டுகிறது.

"நாங்கள் சிசிடிவி பதிவுகளை சரிபார்த்து, குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காண முயற்சிக்கிறோம்," என்று குமார் கூறினார். துணைக் காவல் ஆணையர் (மேற்கு) ராஜேஷ் குமார் யாதவ், சிறுமியின் குடும்பம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தது மற்றும் ஜோத்பூரில் உள்ள ஒரு குடிசையில் வசித்து வருவதாகக் கூறினார். சிறுமியின் தந்தை கூலித் தொழிழிலாளி, அவரது தாயார் மனநலப் பிரச்சினையால் அவதிப்படுகிறார். சிறுமிக்கு ஐந்து வயதில் ஒரு சகோதரனும் இருக்கிறான்” என்றார். இந்தியா தலிபானாகவும், ஆப்கானிஸ்தானாகவும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே வருகிறதோ என்று பதைபதைக்க வைக்கிறது. பெண்கள் போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் சமூகம் எந்த காலத்திலும் முன்னேறாது. அப்படியானதொரு தலைமுறையை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா