இந்தியாவில் இன்னும் 80 மாவட்டங்களில் குறையாத கொரோனா! ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்!

 
இந்தியாவில் இன்னும் 80 மாவட்டங்களில் குறையாத கொரோனா!  ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கொரோனா 2வது அலையால் அதிக பாதிப்புக்களும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. இந்தியாவில் தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் அதிகமாகி அதன்பிறகு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஐசிஎம் ஆர் இயக்குநர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றின் 2வது அலை இன்னும் முழுமையாக குறையவில்லை.

நாட்டில் உள்ள 80 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது. எனவே மக்கள் தொடர்ந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளி இவைகள் தொடர்ந்து கடைப்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா ஆகிய கொரோனா வகைகளுக்கு எதிராக தடுப்பூசிகள் திறம்பட செயலாற்றுகின்றன” என தெரிவித்துள்ளார்.

From around the web